திருமணம் நின்று போன சோகத்திலும் மாணவிக்கு உதவிய மணமகன்.. குவியும் பாராட்டுக்கள்!

 

திருமணம் நின்று போன சோகத்திலும் மாணவிக்கு உதவிய மணமகன்.. குவியும் பாராட்டுக்கள்!

இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் ஆக இருந்த நிலையில், ஊரடங்கால் அந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுதேவ். இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் ஆக இருந்த நிலையில், ஊரடங்கால் அந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அந்த சோகத்திலும், அவசரமாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய மாணவிக்கு உதவியிருக்கிறார் சுதேவ். 

ttn

திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஜென்மா, குரூப் டெஸ்டுக்கு படிப்பதற்காக மார்ச் மாதம் குன்னம்குளத்தில் உள்ள அவரது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நாட்களிலேயே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு விட்டதால் அவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லையாம். இதனிடையியே ஜென்மாவின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் ஜென்மா வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

ttn

ஜென்மா வீடு திரும்ப அவரது தந்தை திருச்சூர் பஞ்சாயத்து உறுப்பினர் உதவியை நாடியதால், அவர் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதில் சுதேவ் அவரது நண்பர்களுடன் ஜென்மாவை அழைத்துக் கொண்டு காலை 11 மணிக்கு அங்கிருந்து கிளம்பி மாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்து சேர்ந்துள்ளனர். சுதேவின் இந்த உதவிக்காக அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.