திருமணத்தை உறுதி செய்த நடிகர் விஷால்: குவியும் வாழ்த்து!

 

திருமணத்தை உறுதி செய்த நடிகர் விஷால்: குவியும் வாழ்த்து!

நடிகர் விஷால் அனிஷாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் அனிஷாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று அறிவித்திருந்தார்.

vishal

இதை தொடர்ந்து விஷால்  ஆந்திர தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக  செய்திகள் வெளியாகின.விஷாலுடன் அனிஷா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து மௌனம் கலைத்துள்ள நடிகர் விஷால், அனிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றன. இதனால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.