திருமணத்துக்கு 4 நாட்களே உள்ளது… மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலருக்கு நிகழ்ந்த பயங்கரம்!

திருமணத்துக்கு 4 நாட்களே உள்ளது… மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலருக்கு நிகழ்ந்த பயங்கரம்!

திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஏரியான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (29). மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு வருகிற டிசம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

sub inspector

இந்தநிலையில், கடந்த 17ம் தேதி மணல் கடத்தலை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுடன் சேர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் ஏற்றிவந்த லாரி போலீசார் சென்ற வாகனத்தில் மோதியது. இதில், ராஜீவ்காந்தி உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மிகவும் மோசமாக காயம் அடைந்து சுயநினைவு இழந்த நிலையில் ராஜீவ்காந்தி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணத்துக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் ராஜீவ் காந்தி உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்துக்கு முன்புதான் ராஜீவ்காந்தியின் தந்தை உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து தாயாரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாராம். இரண்டு மரணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், குடும்பத்தில் ஒரு சுபகாரியம் நடக்க வேண்டும் என்பதால் ராஜீவ் காந்திக்கு திருமண ஏற்பாடு அவசரமாக நடந்ததாம். தற்போது அவரும் உயிரிழந்திருப்பது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.