திருமணத்துக்கு வரும்போது உணவை நீங்களே கொண்டு வந்துவிடுங்கள்! விநோத பத்திரிக்கை!

 

திருமணத்துக்கு வரும்போது உணவை நீங்களே கொண்டு வந்துவிடுங்கள்! விநோத பத்திரிக்கை!

திருமணத்துக்கு வருவதை முன்கூட்டியே உறுதிப்படுத்தாவிட்டால் விருந்தினர்களே தங்களுக்கென ஒரு நாற்காலியையும், சேண்ட்விச்சையும் கொண்டு வந்து விடுமாறு திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திருமணத்துக்கு அழைப்பிதழில் அனைவரும் தவறாது வந்துவிடுமாறு, அச்சிட்டிருப்பார். ஆனால் நீங்களே உணவு மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றை கொண்டுவருமாறு பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் RSVP என சொல்லப்படும், விசேஷத்துக்கு வருவதை உறுதிப்படுத்தக் கோரும் வழக்கம் உள்ளது.  உணவு வீணாவதை தடுப்பதே இதற்கு காரணம். 

Invitation

திருமண அழைப்பிதழில், வருத்தத்தோடு நிராகரிக்கிறேன் அல்லது மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்கிறேன் ஆகிய இரு வாய்ப்புக்களை தேர்வு செய்ய வழங்கியுள்ளனர். அதில் பின் குறிப்பாக செப்டம்பர் 10-ம் தேதிக்குள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள், திருமணத்துக்கு வரும்போது தயவு செய்து ஒரு நாற்காலியையும், ஒரு சாண்ட்விச்சையும் எடுத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.