திருமணத்துக்குத் தயாரான சாமிக்கண்ணு பிரேம்ஜி 

 

திருமணத்துக்குத் தயாரான சாமிக்கண்ணு பிரேம்ஜி 

நடிகர் பிரேம்ஜி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் பிரேம்ஜி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். 

பாடகர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான நடிகர் பிரேம்ஜி ’கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட இவர் சிங்கிளாக இருந்து வந்தார். தற்போது தனது திருமணம் குறித்து முதல் முறையாக வித்தியாசமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆணும் பெண்ணும் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டைஅணிந்துள்ளார். அவரின் பதிவை பார்த்த திரைத் துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.