திருமணத்தில் துப்பாக்கிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட மணமக்கள் கைது ! புதுமணத் தம்பதி என்பதால் எச்சரித்து விடுவிப்பு !

 

நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சித் தலைவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட  மணமக்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகாலாந்து ஒருங்கிணைப்பின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் தலைவரான போஹோட்டோ கிபாவின் மகன் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் ஏ.கே .56 மற்றும் எம் 16 தானியங்கி துப்பாக்கிகளுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நின்றுகொண்டிருக்கிறார்.

நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சித் தலைவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட  மணமக்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகாலாந்து ஒருங்கிணைப்பின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் தலைவரான போஹோட்டோ கிபாவின் மகன் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் ஏ.கே .56 மற்றும் எம் 16 தானியங்கி துப்பாக்கிகளுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நின்றுகொண்டிருக்கிறார். நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பறையில் விருந்தினர்களும் துப்பாக்கிகளுடன் வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

marriage bride

“மணமகனும், மணமகளும் தானியங்கி துப்பாக்கிகளுடன் இருப்பது போல் எந்த படமும் செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை என நாகாலாந்து காவல்துறைத் தலைவர் டி ஜான் லாங்க்குமர் கூறியிருந்தார். 
இந்நிலையில் மணமக்கள் மீது திமாபூர் மாவட்ட காவல்துறையினர் 1959 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் திருமண வரவேற்பறையில் தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கிகள் தந்தையின் மெய்க்காப்பாளர்களுடையது எனவும் புகைப்படங்கள் எடுக்க வாங்கியதாகவும் மணமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை அடுத்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிகள் கொடுத்த 2 மெய்க்காப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மணமக்களை எச்சரித்து ஜாமினில் விடுவித்தது போலீஸ்.

நாகா தேசிய அரசியல் குழுக்களின் கூட்டாக அமைக்கும் 7 நாகா கிளர்ச்சிக் குழுக்களில் என்.எஸ்.சி.என்-யு ஒன்றாகும். அவை மத்திய அரசுடன் சமாதான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துகின்றன.  நாகலிம் சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் மியான்மரை தளமாகக் கொண்ட நாகாலாந்து-கப்லாங்கின் சோசலிஸ்ட் கவுன்சில் ஆகியவற்றின் பிரிந்த தலைவர்களால் 2007 நவம்பர் 23 அன்று NSCN-U உருவாக்கப்பட்டது.