திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்: லீக்கான தளபதி 63 கெட்டப்!

 

திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்: லீக்கான தளபதி 63 கெட்டப்!

நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு மத்தியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 சென்னை: நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு மத்தியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகச் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில்  நடிகர் விஜய் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தளபதி 63 படத்தின் கெட்டப்பில் விஜய் வந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.