திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை! அதுவே ஆறு வாரத்துக்கு அப்பறம்தான் தெரியுமாம்!?

 

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை! அதுவே ஆறு வாரத்துக்கு அப்பறம்தான் தெரியுமாம்!?

நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதே ஆறு வாரங்கள் கழித்து தான் தெரியவந்தது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதே ஆறு வாரங்கள் கழித்து தான் தெரியவந்தது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் எமி ஜாக்சன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான  ‘2.0’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதையடுத்து ஹாலிவுட்,வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். 

amy jackson

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் எமி ஜாக்சன், கடந்த  சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் பானியிட்டோ என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

amy

இதற்கிடையில் சமீபத்தில் எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுருந்தார் அதில், ‘நான் தாய்மை அடைந்துள்ள இந்த தருணத்தை வீட்டின் மாடியில் இருந்து சத்தமாக சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை’ என்று பதிவிட்டுருந்தார். திருமணமாகாமல் கர்ப்பமாக இருப்பது குறித்து எமி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பற்றியெல்லாம் சற்றும் அவர் கண்டுகொள்ளவில்லை.

amy

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்கள் வரை தெரியாது. பின்பு கர்ப்பம் என்று தெரிந்தவுடன் தேவையான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். நான் இப்போதும் இந்தியா, இலங்கை, நியூயார்க் என சுற்றி வருகிறேன். எதிர்காலத்தில் எனது மகனோ அல்லது மகளோ என்னுடன் ஊர் சுற்றுவார்கள். கூடிய விரைவில் காதலர்  ஜார்ஜை திருமணம் செய்ய உள்ளேன். மேலும் எனக்கு பிறக்கவுள்ள குழந்தையை பொறுப்பாக கவனித்து கொள்வேன்’ என்று கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: சந்திரகுமாரி சீரியலில் இருந்து விலகிய ராதிகா? இனி அவருக்கு பதில் இவர் தான்!