திருமணத்திற்கு முன்பே எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறக்க போகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

திருமணத்திற்கு முன்பே எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறக்க போகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகைஎமி ஜாக்சன் தான் கர்ப்பமாக உள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக உள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் எமி ஜாக்சன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான  ‘2.0’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதையடுத்து ஹாலிவுட்,வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். 

amy

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் எமி ஜாக்சன், கடந்த  சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் பானியிட்டோ என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எமி ஜாக்சனுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘கூரையின் மேல் இருந்து கத்தி சொல்ல வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். லண்டனில் இன்று அன்னையர் தினம். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்வதில் இன்றை விட ஒரு நல்ல நாள் அமைய முடியாது. எங்களின் துலாம் ராசி செல்லமே இதற்கு மேல் எங்களால் காக்க முடியாது’ என்று பதிவு செய்துள்ளார்.  

 

இதையும் படிங்க: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டப்ஸ்மாஷ் மிருணாளினி: காரணம் இது தான்?