‘திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை’ : வேலையை ராஜினாமா செய்த போலீஸ் கான்ஸ்டபிள்

 

‘திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை’ : வேலையை ராஜினாமா செய்த போலீஸ் கான்ஸ்டபிள்

நான் கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன். சிறப்பாக பணிபுரிந்து வருகிறேன்.

தெலுங்கானா: திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என்று கூறி போலீஸ் கான்ஸ்டபிள் தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

telangana

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தாந்தி பிரதாப். 29 வயதான இவர் கடந்த   2014ஆம் ஆண்டு தெலுங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார். பொறியியல் பட்டதாரியான  சித்தாந்தி பிரதாப் தனது பணியை திடீரென்று  ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ நான் கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன். சிறப்பாக பணிபுரிந்து வருகிறேன். நான் காவல்துறையில் 35ஆண்டுக் காலம் பணிபுரிந்து கான்ஸ்டபிளாகவே ஓய்வு  பெற்று வருகின்றனர். அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில்லை. மாறாகச் சிறப்பு ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. 

letter

எனக்கு தற்போது 29 வயதாகிறது. நான் திருமணத்திற்குப் பெண் தேடி வருகிறேன். நான் பார்க்கப் போன பெண் ஒருவர், இவர் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவர் வாழ்நாள் முழுவதும் கான்ஸ்டபிளாக தான் இருப்பார் என்று கூறி என்னை நிராகரித்து விட்டார். இதைக்கேட்டு நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.