திருமணத்திற்குத் தயாரான ஷெரின்…மாப்பிள்ளை யார் தெரியுமா?

 

திருமணத்திற்குத் தயாரான ஷெரின்…மாப்பிள்ளை யார் தெரியுமா?

பலரையும் வியப்பில் ஆழ்த்திய   ஷெரின் தான் இந்த சீஸனின் பலரது பேவரிட் கன்டஸ்ட்டன்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து விசில் , உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பிறகு சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு  மீண்டும் பிக் பாஸ்  போட்டியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்  ஷெரின்.பலரையும் வியப்பில் ஆழ்த்திய   ஷெரின் தான் இந்த சீஸனின் பலரது பேவரிட் கன்டஸ்ட்டன்.

ttn

பிக் பாஸ் போட்டி முடிந்த நிலையில்  ஷெரின் மாடலிங், டிஜே என படுபிஸியாக உள்ளார். ஷெரின்  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளதால் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷெரின் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு. பொண்ணு ரெடி…பையன் எங்கே? என்று குறிப்பிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள், பையனும் ரெடி என்று பதிவிட்டு வருகின்றனர்.