திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன்

 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. நாட்டரசன் கோட்டையின் தென்புறம் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்கள் பிரண்டகுளம், அல்லூர். தினமும் பால், மோர், தயிர் விற்க வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் கால் தடுமாறி, தொடர்ந்து கொட்டிக்  கொண்டே இருந்தது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன்

நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. நாட்டரசன் கோட்டையின் தென்புறம் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்கள் பிரண்டகுளம், அல்லூர். தினமும் பால், மோர், தயிர் விற்க வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் கால் தடுமாறி, தொடர்ந்து கொட்டிக்  கொண்டே இருந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.

சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர். மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்மன் மன்னரின் கனவில் தோன்றி “நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் இருக்கிறேன்” என கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டி பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்மன் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கண்களில் ஒளியிழந்தது, அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியை தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த அடுத்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால் “கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்’ என போற்றப்பட்டது. எடுத்த அம்பாள் சிலையை வடக்கு நோக்கி கொண்டு வந்தனர்.
வரும் வழியில் நாயன்மார்குளம் கீழ்புறத்தில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் கிழக்கு புறமாக கீழே வைத்து விட்டனர், சிலை எடுக்க முடியவில்லை. அருள்வாக்கு மூலம் களியாட்டம் நடத்த அம்மன் உத்தரவிட்டாள், உடனடியாக மக்கள் களியாட்டம் நடத்தினர். அப்போது தான் அம்மன் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அங்கிருந்து தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை விரகண்டான் உரணி தென்புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் தெற்குப் புறமாக வைக்கப்பட்டது. மறுநாள் கோயிலில் சென்று பார்த்தபோது அம்மன் வடக்கு புறமாக திரும்பி இருந்தாள். வடக்கு புறமாக  கருவறை அமைத்து பூஜிக்குமாறு அம்மன் அசரீரி ஒலித்தாள். அதன்படி அம்மன் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வளையர் குல மக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து வளையர்களின் கனவில் அம்மன் தோன்றினாள். எனக்கு பூஜை செய்ய உகந்தவன், உவச்சர் இனத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதியில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வந்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டாள்.

அன்று முதல் இன்று வரை அவர்களே அம்பாளுக்கு பூஜை செய்து வருகின்றனர். காளியாட்டம் எனும் கவின்மிகு திருவிழா  கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான விழாவாகும்.
இக்களியாட்டம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.கும்பகோணம் மகாமக திருவிழா போன்று இத்திருவிழாவும் நடத்து வருகிறது. கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன. அம்மனுக்கு அலங்கார மண்டபம், அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான ராஜகோபுரம் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது. அம்மனுக்கு மர வாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் இருக்கின்றன. கோயிலில் தினமும் காலை 7.30 முதல் காலை விளா பூஜையும், 2ம் கால சாந்தி பூஜை காலை 8.30க்கும், உச்சிகால பூஜை நண்பகல் 12.30க்கும் நடைபெறும். மாலை 4 க்கு நடைதிறக்கப்பட்டு சாயரக்ஷை பூஜை நடத்தப்படும். இரவு 8.30க்கு அர்த்தசாம பூஜை நடைபெறும். மாதம் முதல் வெள்ளியில் தங்க அங்கி அணிவிக்கப்படும். சிவாச்சாரியார்கள், ஸ்ரீவைனவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் பிரமோற்ஸவம், ஆகமப்படி கொடியேற்றம் செய்து காப்புக் கட்டப்படுகிறது. வைகாசி பிரமோற்ஸவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஐப்பசியில் கோலாட்ட திருவிழா 10 நாட்களும் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு, காண்போர் வியக்கும் வண்ணம் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் பிரச்னைகள் தீர பிரார்த்தனை செய்கின்றனர். பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.