திருப்பூர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா தேதி மாற்றம்? – உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

 

திருப்பூர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா தேதி மாற்றம்? – உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திருப்பூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திருப்பூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. வருகிற 14ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு ஒரு மாத காலத்துக்கு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால்,14ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் இருக்க வேண்டும். இதனால் திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து முதல்வரிடம் பேசி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.