திருப்பூர் எஸ்.பி.ஐ வங்கி கொள்ளைக்கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் !

 

திருப்பூர் எஸ்.பி.ஐ வங்கி கொள்ளைக்கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் !

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளையும், 19 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உள்ளே புகுந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்து வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளையும், 19 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், உடைக்கப்படாமல் எஞ்சியிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே வங்கியில் நகைகளை வைத்திருந்த மக்கள் வங்கிக்குத் திரண்டதால் அங்குப் பரபரப்பு நிலவியது. 

ttn

இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 11 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இதே போலக் கொள்ளை முயற்சி நடந்ததால் இங்குத் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர் என்றும் அதனை இப்போது நீக்கியதால் தான் கொள்ளை நடந்துள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.