திருப்பூரில் வந்து விட்டது ஸ்மார்ட் காப் செயலி : 144 மீறுவோர் மீது தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!

 

திருப்பூரில் வந்து விட்டது ஸ்மார்ட் காப் செயலி : 144 மீறுவோர் மீது தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!

பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். 

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மீண்டும் ஊரடங்கை  வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

tt

தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில் இன்றுவரை (28-04-2020) முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இங்கு தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடிக்க  திருப்பூர் மாநகர காவல்துறை சார்பாக SmartCop என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

tt

ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், இந்தச் செயலிமூலம் தேவையில்லால் வெளியில்  சுற்றுபவர்களின் விவரங்களை சேகரிக்க முடியும். பின்னர் ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைப்பேசி எண், வாகனப் பதிவெண், ஓட்டுநர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை இந்தச் செயலியில் பதிவுசெய்ய முடியும். அதுமட்டுமின்றி  ஜிபிஎஸ் மூலம் அவர்கள் இருக்கும் நிகழ்விடத்தை கண்டறிவதுடன் சம்பந்தபட்டவரின் புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை  செயலி மூலமே எடுத்து கொள்ளலாம். பிடிபட்ட நபரின் கைப்பேசி எண் அல்லது வாகன எண்ணை பதிவிடும் போது செயலி முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து அவருடைய முந்தைய தவறுகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்யும். 
 இவர்கள் காவலர்களிடம் சிக்கினால், அவர்களது தகவல்கள் இந்தச் செயலியில் மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியாது. இதன் மூலம் அவர்கள் மீது  தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான நேற்று திருப்பூர் போலீசார்  இந்தச் செயலி மூலம் 50 பேருக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.