திருப்பரங்குன்றத்தில் கமல் மீது செருப்பு வீசிய தீவிரவாத இந்துக்கள்…

 

திருப்பரங்குன்றத்தில் கமல் மீது செருப்பு வீசிய தீவிரவாத இந்துக்கள்…

கமலின் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ பேச்சு அரசியல் வட்டாரத்தில் மாபெரும் ஹிட் அடித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சில தீவிரவாதி இந்துக்கள் அவர் மீது அல்பத்தனமாக செருப்பு வீசினர்.

கமலின் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ பேச்சு அரசியல் வட்டாரத்தில் மாபெரும் ஹிட் அடித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சில தீவிரவாதி இந்துக்கள் அவர் மீது அல்பத்தனமாக செருப்பு வீசினர்.

கோட்சே குறித்து கமல் பேசியதால் கொந்தளித்த இந்து தீவிரவாதிகள் டெல்லி உயர்நீதிமன்றம் துவங்கி கிராமப் பஞ்சாயத்துகள் உட்பட பல்வேறு இடங்களில் புகார் மனு தாக்கல் செய்ததால் அந்த வெட்டி அலை ஓயட்டும் என்று பிரச்சாரத்திற்குப் போகாமல் ஓய்வில் இருந்தார் கமல்.

kamal

இந்தநிலையில்  இரண்டு நாட்களுக்கு பிறகு,  நேற்று திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், ’தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம்; யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். 

kamal

அதனைத்தொடர்ந்து, தங்கும் விடுதிக்கு சென்று விட்டார். அங்கு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியபின்னர், மேல அனுப்பானடியில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார். மேலும், தவறு எங்கு நடந்தாலும் அதை எம் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் கூறிய அவர் வழக்குகள் போட்டு நம்மை பிரிக்க நினைக்கிறார்கள்; மக்கள் நீதி மய்யத்தில் பட்டை போட்டவரும் உண்டு, சிலுவை போட்டவரும் உண்டு. இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகள் நான் அவர்களின் உறவினர் என்றும் தெரிவித்தார். இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும்  கமல்ஹாசன் கூறினார். 

 

அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் மேடைக்குச் சென்றபோது, அவரை நோக்கி சில விஷமிகள் காலணிகளை வீசினர். அதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலணி வீசிவிட்டுத் தப்பி ஓட முயன்றவர்களில் சுமார் 10 பேரை ம.நீ.ம. தொண்டர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.