திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய் தான்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

 

திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய் தான்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க தேவையான நெய்யை  விநியோகிக்க ஆவின் நிர்வாகத்தைத்  திருப்பதி தேவஸ்தானம் தேர்வு செய்துள்ளது.

திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க தேவையான நெய்யை  விநியோகிக்க ஆவின் நிர்வாகத்தைத்  திருப்பதி தேவஸ்தானம் தேர்வு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, 7 லட்சத்துக்கு 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்யத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதில் சேலம்- ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்துகொண்டது.

ghee

இந்நிலையில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 

இறுதியாக 2003 – 2004 ஆண்டு ஆவின் நிறுவனம் நெய்  வழங்கத் தேர்வு செய்யப்பட்டதும், அதன் பிறகு 15ஆண்டுகள் கழித்து இந்த முறை தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.