திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சூரிய,சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்

 

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சூரிய,சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி காலை,மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார்.

tirupathi

இவ்விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதனைதொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

tirupathik

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 7 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு தங்கக் குதிரை வாகன வீதிஉலாவும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் இவ்விழாவை  கண்டு களித்தனர்.