திருப்பதி திருமலையில் இனி விஐபி தரிசனத்திற்கு கோவிந்தா கோவிந்தா!

 

திருப்பதி திருமலையில் இனி விஐபி தரிசனத்திற்கு கோவிந்தா கோவிந்தா!

நெக்குருக வேண்டிக்கொள்ள உண்மையான‌ பக்தர்கள் மூன்று நாட்கள்வரை காத்திருக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் விஐபி சீட்டுப் பெற்று ஜஸ்ட் லைக் தட்டாக தரிசனம் பெற்றுவந்தது பாலாஜிக்கே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

சாதாரண, விஐபி, விவிஐபி பக்தர்கள் என வெங்கடாஜலபதி இனிமேல் வகுப்புவாரியாக தரிசனம் காட்டப்போவதில்லை. நெக்குருக வேண்டிக்கொள்ள உண்மையான‌ பக்தர்கள் மூன்று நாட்கள்வரை காத்திருக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் விஐபி சீட்டுப் பெற்று ஜஸ்ட் லைக் தட்டாக தரிசனம் பெற்றுவந்தது பாலாஜிக்கே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். விஐபி தரிசனத்திற்காக எல்1 பிரிவின்கீழ் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும், எல்2 பிரிவின்கீழ் திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மற்றும் பிற அரசு அதிகாரிகளுக்கும் சிறப்பு தரிசன சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

Tirumala Tirupati

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தான சேர்மனாக தனது உறவினரை நியமித்திருந்தார். தற்போது முதலமைச்சரின் அறிவுரையின்பேரில், மேற்படி முக்கிய முடிவை திருப்பதி தேவஸ்தானம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தகவல்களின்படிப் பார்த்தால், எல்1 மற்றும் எல்2 ரக தரிசன சீட்டுகள் முற்றிலுமாக நீக்கப்படுவதாகவும், விவிஐபி தரிசனம் மட்டும் அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விஐபி தரிசன சீட்டுமுறை ரத்து என ஏற்கெனவே பலமுறை அறிவிப்புகள் வெளியாகி, அறிவிப்புகள்தான் ரத்தாகி இருக்கின்றன. இந்தமுறையாவது நடக்கிறதா பார்ப்போம்!