திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் திவ்ய தரிசனம் ரத்து!  

 

திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் திவ்ய தரிசனம் ரத்து!  

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி : 

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று  நள்ளிரவு 1 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடை திறக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடைபெறுகின்றது .

அதனையடுத்து இன்று இரவு  1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

tirupathi

நாளை மற்றும் நாளை மறுநாள் சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பொதுவாக தெலுங்கு வருட பிறப்பு தினமான யுகாதிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். 

ஆந்திர அரசு அறநிலையத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

அதே போல் திருப்பதி திருமலையில் சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோயிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதிப்பார்களோ

அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளனர் எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

tirupathi

திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு தினமான நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் மூலமாக பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு தினமான நாளை பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.