திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தம்

திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு படிப்படியாக மாநில அரசாங்கங்கள் அறிவுரைப்படி பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையே திருப்பதி திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

tirupati

இந்நிலையில், கண்ணாடி பாட்டில்கள் எளிதில் உடைந்து விடும் அபாயம் உள்ளதாலும், உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.