திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி !

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி !

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாத துவாதசியை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

திருப்பதி :  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .

அதே போல் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல்  திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்த பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவர்கள் சொர்க்கவாசலில் எழுந்தருளினர். 

tirupathi

அதனை தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகளவிலான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர்.மேலும் மார்கழி மாதம் தொடங்கியதால் மலையில் குளிருடன் கூடிய காற்று வீசி வருகிறது.

எனவே, சுவாமி தரிசனத்திற்காக வந்த மூத்தகுடிமக்கள், கைக்குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகளில் 4.75 கோடியில் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய தற்காலிக நிழற்பந்தல்களை ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணி முதல் நிழற்பந்தல்களில் தங்க வைக்கப்பட்ட பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை வழங்கப்பட்டது.

பக்தர்கள் வசதிக்காக திருப்பதி திருமலை இடையே 24 மணி நேரமும் வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

tirupathi

நேற்று காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அதனை தொடர்ந்து  இன்று துவாதசியையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.