திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசனம் நிறுத்தம்!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசனம் நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க சர்வ தரிசன டிக்கெட் என்ற பெயரில் ஆதார் கார்டு மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

thirupathi

திருமலையில் உள்ள பக்தர்கள் இந்த டிக்கெட் மீது பெரும் ஆதரவு காட்டாததால் திருமலையில் நாளை முதல் ஆதார் மூலம் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் செயல்பட்டு வரும் அனைத்து கவுண்டர்களும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படுமென தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.