திருப்பதியில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!

 

திருப்பதியில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!

நடிகை ஸ்ரேயா சரண் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

திருப்பதி: நடிகை ஸ்ரேயா சரண் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரேயா இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவே திருப்பதி வந்த ஸ்ரேயா இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார்.

shriya

நடிகை ஸ்ரேயாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். அதைத் தொடர்ந்து செய்தியாளரகளை சந்தித்த ஸ்ரேயா, ஆண்டுக்கு 3 முறை திருப்பதி கோயிலுக்கு வருவது தனது வழக்கம் எனக் கூறினார். மேலும், விரைவில் புத்தாண்டு பிறக்கவுள்ளதால் அனைவருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.