திருப்பதியில் சலுகை விலையில் இனி லட்டு வழங்கப்படாது : ஒருவருக்கு ஒரு லட்டு தான் !

 

திருப்பதியில் சலுகை விலையில் இனி லட்டு வழங்கப்படாது : ஒருவருக்கு ஒரு லட்டு தான் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்து மக்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்கின்றனர்.

Thirupathi

இந்த கோவிலில், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் நடைப்பயணமாக வரும் பக்தர்களுக்கும், சர்வ தரிசனம் டிக்கெட் பெற்று நேரடியாகத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், வைகுண்டம் காத்திருப்பு அறைக்குச் செல்லும் வழியில் சலுகை விலையில் 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதே லட்டு கோவிலுக்கு வெளியே ஒரு லட்டு ரூ.50க்கு விற்கப்படுகிறது. 

Laddu

இந்நிலையில், மக்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டு வரும் லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்யத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, தரிசனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கவும் மீதமுள்ள லட்டுகளை, ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.