திருப்பதிக்குப் போனால் திருப்பம் உண்டாகும்ன்னு, நம்பிப் போனால்… இப்படியா பண்ணுவாங்க..!?

 

திருப்பதிக்குப் போனால் திருப்பம் உண்டாகும்ன்னு, நம்பிப் போனால்… இப்படியா பண்ணுவாங்க..!?

திருப்பதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தமிழக பக்தர்களை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

திருப்பதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தமிழக பக்தர்களை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

காஞ்சிபுரத்தை அடுத்த  மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த  40 பேர்  ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
அலிபிரி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியபோது கன்னியப்பன் என்பவரிடமிருந்து புகைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடனடியாக அதைப்  பறிமுதல் செய்த பாதுகாப்பு ஊழியர்கள் புகைப்பொருளை குப்பையில் வீச முயற்சி செய்திருக்கிறார்கள்.அதைத் தடுக்க முயற்சித்த கன்னியப்பனை அங்கிருந்த போலீசார் ஒருவர் கடுமையாக தங்கியிருக்கிறார். 

1

இதை சற்றும் எதிர்பார்க்காத கன்னியப்பனின்  உறவினர்கள்  போலீஸ்காரரை தடுக்க முயன்றபோது, தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா என்ற பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது. சந்திரா, திருமலையில் உள்ள அரசு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பிரச்சினைகளிலிருந்து மீளவும்,திருப்பதிக்குப் போனால் திருப்பம் உண்டாகும் என்று நம்பி மலையேறுகிற பக்தர்களை இப்படித் தங்கியிருப்பது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.