திருப்தி தேசாயுடன் சென்ற பிந்து மீது மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே தாக்குதல் !

 

திருப்தி தேசாயுடன் சென்ற பிந்து மீது மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே தாக்குதல் !

கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் பலத்த பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.

சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் செல்லக் கூடாது என்ற நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததன் பேரில் நிறையப் பெண்கள் தரிசனத்திற்காகச் சென்றனர். இதனை எதிர்த்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. 

sabarima;

அச்சமயம், கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் பலத்த பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர். அவர்கள் சென்று வந்த பின்னர் கோவிலைப் புனிதப் படுத்தும் விதமாகத் தலைமை தந்திரி சிரிப்பு பூஜைக்கு நடத்தினார்.பெண்கள் சபரிமலைக்குள் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மும்பையில் இருந்து சபரிமலை செல்வதற்காக வந்த திருப்தி தேசாய் கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டார். 

bindhu

சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாமா, கூடாதா என்பது குறித்துத் தீர்ப்பு வரும் வரை பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்றும் ஆனால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும் கேரளா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்ட திருப்தி தேசாய் இந்த ஆண்டு சபரிமலைக்குச் செல்வதற்காக இன்று காலை கொச்சி வந்தார். 

bindhu

கடந்த ஆண்டு ஐயப்ப தரிசனம் செய்த பிந்து, திருப்தி தேசாயுடன் சேர்ந்து தரிசனம் செய்வதற்காக இருவரும் காவல்துறை அனுமதி வாங்கக் கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

tripti

அங்குக் கேரள பெண் பிந்து மீது மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே தாக்குதல் நடந்துள்ளது. காவல் அலுவலகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.