திருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு !

 

திருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு !

அரசு உத்தரவின் பேரில், தாமிரபரணியின் குறுக்கே 235 மீட்டர் நீளத்தில் 14.80 மீட்டர் அகலத்தில் 11 தூண்களுடன் புதிய பாலம் கட்டப்பட்டது.

சுமார் 176 ஆண்டுகளுக்கு முன்னர் கொக்கிரகுளம் வண்ணார்பேட்டை பகுதியில்  திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில் ‘சுலோச்சன முதலியார் பாலம்’ கட்டப்பட்டது. அந்த பாலம், இக்காலத்தில் அதிகரித்துள்ள போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லாததால் அந்த பாலத்தின் அருகே புதியதாக மற்றொரு பாலம் கட்டும் படி அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவின் பேரில், தாமிரபரணியின் குறுக்கே 235 மீட்டர் நீளத்தில் 14.80 மீட்டர் அகலத்தில் 11 தூண்களுடன் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த மாத துவக்கத்திலேயே, இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில், சாலை விரிவாக்கத் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. 

ttn

இந்நிலையில், புதியதாகக் கட்டப்பட்ட ஆற்றுப்பாலத்தின் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கத் திட்டப்பணிகள் நிறைவடைந்ததால் இன்று  ஆற்றுப்பாலம் திறக்கப்பட்டது. எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக இந்த பாலத்தை அம்மாவட்ட நிர்வாகம் திறந்து வைத்துள்ளது.