திருநெல்வேலி ஆதீனத்தில் தகராறு : பூட்டுப்போட்டது  போலீஸ்!

 

திருநெல்வேலி ஆதீனத்தில் தகராறு : பூட்டுப்போட்டது  போலீஸ்!

கொஞ்ச காலமாகவே தமிழகத்தில் ஆதீனங்கள் அடிக்கடி செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நெல்லையில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் ஸ்ரீகோளரிநாத ஆதீனத்தில் தகராறு துவங்கி இருக்கிறது.

கொஞ்ச காலமாகவே தமிழகத்தில் ஆதீனங்கள் அடிக்கடி செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நெல்லையில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் ஸ்ரீகோளரிநாத ஆதீனத்தில் தகராறு துவங்கி இருக்கிறது.

இந்த ஆதீனம் கம்மாளர் இனத்துக்கு உரியது என்பதால் அந்த சங்கத்தவர்களுக்கும் ஆதின பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இடையே மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

temple

நெல்லையப்பர் கோவிலுக்கு வடக்கே அமைந்திருக்கிறது இந்த ஸ்ரீபரசமய கேளரிநாதர் ஆதீனம். இதை 39 தலைமுறைக்கு முன்பு ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சுவாமி என்பவரால் துவங்கப்பட்டது. இதன் கடைசி ஆதீனகர்த்தராக 1982 ஏப்ரல் 17 ந்தேதி முதல் பதவி வகித்துவந்த ஸ்ரீ சிவசன்முக ஞானாச்சாரிய குரு மறைவை ஒட்டி அடுத்த பட்டம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. 

கடந்த 23-ம் தேதி நடை பெற்ற தாமிரபரணி புஷ்கரத்தின் போது ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி என்பவர் கலந்துகொண்டார். இதையடுத்து டாக்டர் குரு சண்முகநாதன் என்பவர் ஆதினத்தின் பொதுச்செயலாளர் என்கிற முறையில் புத்தாத்மாநந்தாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கும் ஆதீனத்துக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டார்.ஆனாலும் ஒரு தரப்பினர் ஸ்ரீபுத்தாத்மானந்தவுக்கு 29-வது ஆதீனமாக பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தனர். 

temple

இது தொடர்பாக புத்தானந்தா தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் மோதல் வெடித்தது. போலீசார் அழைக்கப்பட்டனர்.அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இதனால் இருதரப்பில் யாரும் மடத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக போலீசார் மடத்தை பூட்டிவிட்டுச் சென்றனர்.