திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு: குற்றத்திற்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் யார்? சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை!

 

திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு: குற்றத்திற்கு உதவிய  காவல்துறை அதிகாரிகள் யார்? சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு 4 நாள் சிபிசிஐடி காவலிலிருந்த, நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு 4 நாள் சிபிசிஐடி காவலிலிருந்த, நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:

ttn

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீஸார் விசாரித்தாலும், தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இதனால் கைது செய்யப்பட்ட நபர்களின் இல்லங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. 

முன்கூட்டியே சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி:

ttn

இதை தொடர்ந்து, நீதிமன்றம் அனுமதியோடு, காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீஸார், விசாரித்து வந்தனர்.  நான்கு  நாட்களாக நடந்த இந்த விசாரணை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.  4 நாள் சிபிசிஐடி காவலிலிருந்த, திருநாவுக்கரசு கோவை நீதிமன்ற நீதிபதி நாகராஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று மாலை வரை கால அவகாசம் இருந்த நிலையில் முன்கூட்டியே சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திருநாவுக்கரசுக்கு உதவிய காவலர்கள் யார்?

ttn

பொள்ளாச்சியில் கேபிள் தொழில், வட்டி தொழில் செய்து வந்த திருநாவுக்கரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத் தான் திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள், இத்தனை நாட்கள், தப்பித்து வந்ததாகவும் தகவல் பரவி வருகின்றது.  இந்த விவகாரத்தில் திருநாவுக்கரசுக்கு உதவிய காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

தாக்குதல் எச்சரிக்கை!

pollchi

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை அவரது வீடு, பாலியல் வன்கொடுமை நடந்த  பண்ணை வீடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், அப்பகுதி மக்களால் திருநாவுக்கரசு தாக்கப்படும் வாய்ப்பு இருப்பதால்,  தற்காலிகமாக சிபிசிஐடி போலீஸார் அந்த முடிவை கைவிட்டுள்ளனர். 

சிபிஐ விசாரணை எப்போது தொடங்கும்?

tttn

பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொள்ளும் வரை சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கின் மீதான விசாரணையைத் தொடர்ந்து நடத்துவர் என்று கூறப்படுகிறது.