திருநாவுக்கரசர் செய்யுற வேலையா இது..? பல்லைக் கடிக்கும் காங்கிரஸ் – திமுக நிர்வாகிகள்..!

 

திருநாவுக்கரசர் செய்யுற வேலையா இது..? பல்லைக் கடிக்கும் காங்கிரஸ் – திமுக நிர்வாகிகள்..!

பழைய பாசத்தில் அ.தி.மு.க.,வினருக்கு அள்ளி கொடுத்து வருகிறாரே என காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அ.தி.மு.கவில் இருந்தவர் தற்போதைய காங்கிரஸ் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர். கட்சி மாறி எம்.பி ஆனாலும் அதிமுக பாசம் இன்னும் அவரை விட்டு போகாமல் இருக்கிறது. 

 திருச்சி, எம்.பி.,யாக திருநாவுக்கரசர் வெற்றி பெற்றதும் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலேயே அ.தி.மு.க.,வினரும் எனக்காக வேலை பார்த்தனர் எனக் கொளுத்தி போட்டார். இதை நிரூபிக்கற விதமாக திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவிகளை, அ.தி.மு.க., மாநகர மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், மாவட்ட துணைச் செயலர் ஜாக்குலின் ஆகியோருக்கு வாங்கி குடுத்திருக்கார்.

thirunavukarsar

திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவராக திருநாவுக்கரசர் தான் இருக்கிறார். அவரது  வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரசார், கூட்டணி கட்சியான தி.மு.க.,வினருக்கு பதவிகள் வாங்கி தராமல் பழைய பாசத்தில் அ.தி.மு.க.,வினருக்கு அள்ளி கொடுத்து வருகிறாரே என காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள்.