திருநள்ளாறு குளத்தில் குளிக்கத் தடை – கொரோனா பீதி காரணமாக நடவடிக்கை! நாராயணசாமி பேட்டி

திருநள்ளாறு குளத்தில் குளிக்கத் தடை – கொரோனா பீதி காரணமாக நடவடிக்கை! நாராயணசாமி பேட்டி

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாகத் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் குளத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கிருமியை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை சந்தேகத்துக்கிட்டமான நபர்கள் 83 பேரில் 16 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு 14 பேருக்கு கொரோனா பதிப்பு இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறித்த ரிசல்ட் வரவில்லை என்பதால் 2 பேர் மட்டும்  தனி அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

puducherry

புதுச்சேரியில் இதுவரை கொரானா நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நோட்டீஸ் மூலமாக 50 ஆயிரம் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளைக்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு தொடர்ந்து தேவையான அறிவுரைகளை தெரிவித்து வருகின்றனர். காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் உள்ள நல தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மருத்துவர்கள் குழு மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா வைரஸை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.