திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!

 

திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!

குடும்ப பிரச்னை காரணமாக ஆலப்புழாவில் செயல்பட்டு வரும் குடும்பஸ்ரீ எனப்படும் திருநங்கைகளுக்கான அமைப்பில் தஞ்சமடைந்துள்ளார்

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த திருநம்பிகள் இருவருக்கு பொருட்களை விநியோகம் செய்யும் பணியை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த திருநம்பி ஜேசன் (22). இவருக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பது கனவு. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக 12-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அவர், தொலைகாட்சி சேனல் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவிலும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

lgbt

இவருக்கு தந்தை இல்லை. தாயும், சகோதரரும், பாட்டியும் மட்டுமே உள்ளனர். இவர்கள் மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்தனர், உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என கூறும் ஜேசன், குடும்ப பிரச்னை காரணமாக ஆலப்புழாவில் செயல்பட்டு வரும் குடும்பஸ்ரீ எனப்படும் திருநங்கைகளுக்கான அமைப்பில் தஞ்சமடைந்துள்ளார்.

kudumbashree

உடல்நிலை சரியில்லாத தனது தாயை கவனித்துக் கொள்ள ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்து வருவாய் ஈட்டும் பொருட்டு ஜேசன் வேலை  தேடி வந்துள்ளார். இதனை அறிந்த குடும்பஸ்ரீ அமைப்பின் தலைவர் அருணிமா சல்ஃபிகர் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஜேசனுக்கு வேலை கிடைத்து விட்டது என அருணிமா சல்ஃபிகர் கூறும்போது, முட்டாள்கள் தினம் என்பதால் தன்னை அவர் ஏமாற்றவே அவ்வாறு கூறுகிறார் என ஜேசன் நினைத்துள்ளார். ஆனால், ஜேசனுக்கும் மற்றொரு திருநம்பியான சிவா என்பவருக்கும் பொருட்களை விநியோகம் செய்யும் பணியை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளதாக தெரிவித்ததையடுத்து, இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

amazon

ஆலப்புலா துணை ஆட்சியர் தங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார் என கூறும் சிவா, அமேசான் நிறுவனத்தில் எங்களுக்கு வேலை கிடைக்க அவர் ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார். சிவாவும், ஜேசன் போன்று தான். அவரும் தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். தற்போது மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்துள்ளதால், அவரும் தீவிரமாக வேலை தேடி வந்துள்ளார். இஷான் எனும் நண்பர் மூலமாக இவரும் குடும்பஸ்ரீ அமைப்பில் அடைக்கலம் அடைந்த அவர், இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றிலும், பின்னர் லூலு மார்க்கெட்டில் கேசியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கூடுதல் வருவாய் ஈட்டும் பொருட்டு மீன்கள் விற்று வந்துள்ளார். தற்போது அவருக்கும் அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

சிவாவிடம் இருசக்கர வாகனமும், லைசென்சும் உள்ளது. ஆனால், ஜேசனிடம் இல்லை. எனவே, இருவரம் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க

பெண்களின் இன்பம் எந்த ஆணையும் சார்ந்து அல்ல; மன வருத்தத்தில் சௌமியா சேத்