திருநங்கை காவலரை உயர் அதிகாரிகள் ஏளனம்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

 

திருநங்கை காவலரை உயர் அதிகாரிகள் ஏளனம்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

உயர் அதிகாரிகள் ஏளனமாகப் பேசியதால் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வரும் திருநங்கை நஸ்ரியா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: உயர் அதிகாரிகள் ஏளனமாகப் பேசியதால் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வரும் திருநங்கை நஸ்ரியா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் காவல்துறை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர், நஸ்ரியா. திருநங்கையான இவரை உயரதிகாரிகள் ஏளனமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நஸ்ரியா, எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார்.

மேலும், நஸ்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.