திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் பறிக்கும் ஆண்கள்: கோவையில் பரபரப்பு!

 

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் பறிக்கும் ஆண்கள்: கோவையில் பரபரப்பு!

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்று சான்றிதழ் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அழகிகள் இருவர் விக்னேஷிடம் பணம் கேட்டுள்ளனர்

கோவை : அழகிகள் போல வேடம் அணிந்து வந்து ஆண்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விக்னேஷ். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் இவர், கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்று சான்றிதழ் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அழகிகள் இருவர் விக்னேஷிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் 10 ரூபாய்  எடுத்து கொடுக்க கடுப்பான அவர்கள், அவரிடமிருந்த 3 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே அந்த வழியாக வந்த பீளமேடு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்கள் பெயர் கனி,ஆனந்தி என்று கூறியுள்ளனர். 

 

இருப்பினும்  அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் பெண்களோ, திருநங்கையோ அல்ல. ஆண்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு அழகி வேடம்  போட்டு ஆண்களிடம் பணம் பறித்து வந்தது அம்பலமானது. இதுபோல் கேரளாவைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை ராம்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறிக்க முயன்றதால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் 5பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.