திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம்! எங்கு தெரியுமா?

 

திருநங்கைகளுக்கென தனி பல்கலைக்கழகம்! எங்கு தெரியுமா?

இந்தியாவிலேயே முதன்முறையாக உத்திரபிரதேசத்தில் திருநங்கைகளுக்கான தனி பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக உத்திரபிரதேசத்தில் திருநங்கைகளுக்கான தனி பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளது. 

கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகிய அனைத்து வசதிகளும் திருநங்கைகளுக்கு எட்டக்கனியாகவே உள்ளது. இருப்பினும் பல தடைகளை தாண்டி பல திருநங்கைகள், பல்வேறு துறைகளில் சாதித்த வண்ணம் உள்ளனர். இதுவரை இந்தியாவில் திருநங்கைகளுக்கென தனியாக பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ இல்லாத நிலையில் உத்திரபிரதேச மாநிலம்  குஷிநகரில் மூன்றாம் திருநங்கைகளுக்கான பிரத்யேகமாக பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளது.

transgender

அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழக்கத்தில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் அந்த பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடங்கப்படும் என அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்கள் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.