திருநங்கைகளுக்கான உள்ளாடை – முதன்முறையாக உருவாக்கிய சீன மாணவர்

 

திருநங்கைகளுக்கான உள்ளாடை – முதன்முறையாக உருவாக்கிய சீன மாணவர்

சீன பேஷன் மாணவர் ஒருவர் திருநங்கைகள் அணியக் கூடிய வகையில் உள்ளாடை ஒன்றை தயாரித்துள்ளார்.

நியூ ஜெர்சி: சீன பேஷன் மாணவர் ஒருவர் திருநங்கைகள் அணியக் கூடிய வகையில் உள்ளாடை ஒன்றை தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில் பேஷன் தொடர்பான பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஹாபோ ஜாங் என்ற சீன மாணவர் திருநங்கைகள் அணியக் கூடிய வகையில் உள்ளாடை ஒன்றை தயாரித்துள்ளார். தனது பட்டப் படிப்பு புராஜெக்ட்க்காக சிறந்த ஒன்றை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்து இதை அவர் தயாரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான திருநங்கை மக்களுக்கு ஆறுதலையும் மரியாதையையும் அளிக்க உதவும் ஒரு தேவையை பூர்த்தி செய்ய ஜாங் விரும்பினார். அதனால் இந்த உள்ளாடையை அந்த மாணவர் உருவாக்கி உள்ளார். அந்த மாணவரின் இந்த முயற்சிக்கு கல்லூரியில் பெரும் பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் சீன மாணவரின் முயற்சிக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.