திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

 

திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறையோடு பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறையோடு பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். அது மட்டுமின்றி தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று 73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். அதை ஊக்கவிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார். அவர்கள் இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.

vj

இது குறித்துப் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரையக் காரணம், பாலின சமத்துவத்தைப் பற்றிப் பேசிய ஒரே சுதந்திரப் போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரையும் இந்த தருணம் பெருமையாக உள்ளது. இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு  நன்றி’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கைகளை அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதை மறுத்த அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன், தான் எப்போதும் அவர்களுக்குத் துணை நிற்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.