திருத்தணி-அரக்கோணம் இடையே இந்த இரண்டு நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் !

 

திருத்தணி-அரக்கோணம் இடையே இந்த இரண்டு நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் !

திருத்தணியில் வரும் 31 ஆம் தேதி திருப்புகழ் திருப்படி திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் வரும் 31 ஆம் தேதி திருப்புகழ் திருப்படி திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். அதனால், திருத்தணி-அரக்கோணம் இடையே அந்த இரண்டு நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

ttn

அதில், “திருப்புகழ் திருப்படியை முன்னிட்டு அரக்கோணத்தில் இருந்து டிச.1 மற்றும் ஜன. 1 ஆம் தேதி திருத்தணி-அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், அந்த ரயில்களின் விவரங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

சிறப்பு ரயில்களின் விவரங்கள்:

  • அரக்கோணத்தில் இருந்து டிசம்பர் 31 மற்றும்  ஜனவரி 1 ஆம் தேதி இரவு 10:10 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10:20 மணிக்கு திருத்தணி சென்றடையும். 
  • இரவு 10:30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் மின்சார ரயில் 10:50 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். 
  • அரக்கோணத்தில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில், இரவு 11:30 மணிக்கு  திருத்தணி சென்றடையும்.
  • திருத்தணியில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரயில் இரவு 12 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.