’திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன்’…ஒரு முரட்டுச் சண்டைக்கு திமுகவை இழுக்கும் ராஜேந்திர பாலாஜி…

 

’திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன்’…ஒரு முரட்டுச் சண்டைக்கு திமுகவை இழுக்கும் ராஜேந்திர பாலாஜி…

உளறிக்கொட்டுவதில் நம்பர் ஒன் எனப் பெயரெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’கஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இன்று அம்பானி குடும்பத்திலிருந்து வந்த மிட்டா மிராசு மாதிரி பேசுகிறார்’ என நாகரிகமில்லாமல் முக.ஸ்டாலினை விமர்சித்தார்

உளறிக்கொட்டுவதில் நம்பர் ஒன் எனப் பெயரெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’கஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இன்று அம்பானி குடும்பத்திலிருந்து வந்த மிட்டா மிராசு மாதிரி பேசுகிறார்’ என நாகரிகமில்லாமல் முக.ஸ்டாலினை விமர்சித்தார்.

rajendra balaji

தேர்தல் தோல்விக்குப்பின் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். மக்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் விஷத்தை விதைத்து, அதன் மூலமாக திமுகவினர் வெற்றியை அறுவடை செய்துள்ளார்கள். இதை உறுதியான வெற்றியாக கருத முடியாது. அதிமுக இரண்டாக பிரிந்துள்ளதை பலமாக வைத்து திமுக தந்திரமாக வாக்குகளை கைப்பற்றியது. 

rajendra balaji and stalin

ஒருவேளை சட்டசபையிலும் கூட திமுக அதிமுகவை வீழ்த்தி இருந்தால் சட்டமன்றத்தில்  எப்படியும்  வெற்றி பெற்று எங்களால் ஆட்சியை காப்பாற்றியிருக்க முடியும். சட்டமன்றத்தில் எடப்பாடி ஆட்சி தான் வேண்டும் என மக்கள் கொடுத்திருக்கின்ற வைரம் கீரிடம் தான் இந்த ஆட்சி. அதிமுகவை அழிப்போம் என்று கூறியவர்கள் அழிந்து விட்டார்கள். எங்களுக்கு இனிமே போட்டி திமுக மட்டும்தான். தினகரன் எத்தனை நாள் பொய் சொல்லி கட்சியை ஏமாற்ற முடியும்.

திமுக பெற்ற வெற்றி தமிழகத்தில் பூஜ்ஜியம் தான்.இதனால் அவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது. மத்தியில் பாஜக அசுர பலத்தில் வந்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்குவார்கள்.எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தமபுத்திரன் மாதிரி அம்பானி குடும்பத்திலிருந்து பிறந்து வந்த மாதிரி பேசி வருகிறார். கஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் தான் ஸ்டாலின் இன்று மிட்டா மிராசு மாதிரி பேசி வருகிறார். 

rajendra balaji

23ம் தேதி அனைவரும் ஜெயிலுக்கு சென்று விடுவார்கள். முதலமைச்சராக போகிறேன் என்று கலைஞர் கல்லறையில் தான் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்று இடம் பார்த்தார்கள். ஆனால் தமிழகத்தில் அவர் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை. அவர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் கூட தமிழகத்தின் முதல்வராக முடியாது’ என்று பொங்கித் தீர்த்தார் ராஜேந்திர பாலாஜி. விரைவில் அண்ணன் துரை முருகனிடமிருந்து ராஜேந்திர பாலாஜிக்கு இதே தரத்தில் பதில் பேட்டியை எதிர்பார்க்கிறோம்.