திருட்டு நகைத் தொழில் செழிக்க குலதெய்வம் கோயிலில் பூஜை !  குலதெய்வமே டென்ஷனாகி போலீசுக்கு தகவல் !

 

திருட்டு நகைத் தொழில் செழிக்க குலதெய்வம் கோயிலில் பூஜை !  குலதெய்வமே டென்ஷனாகி போலீசுக்கு தகவல் !

கொள்ளையடித்த நகைகளை நகைக்கடை ஆரம்பித்து விற்பனை செய்துவந்த 4 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்
நெல்லை விஎம் சத்திரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் 77 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்குமாறு நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

கொள்ளையடித்த நகைகளை நகைக்கடை ஆரம்பித்து விற்பனை செய்துவந்த 4 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்
நெல்லை விஎம் சத்திரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் 77 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்குமாறு நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். கொள்ளைப் போன வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் கைரேகை தடயம் கூட வைக்காமல் சென்றுள்ளனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியை நாடியது போலீஸ். அப்போதுதான் கொள்ளையர்கள் சென்ற காரில் உள்ள பதிவெண் உண்மை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைகளில் எங்கெங்கு சிசிடிவி இருக்கிறதோ அதை முழுவதுமாக போலீசார் சோதனை செய்தனர். அதாவது 16 நாட்கள் 400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தனர். கொள்ளையர்கள் அடிக்கடி நம்பர் பிளேட் மாற்றி நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. கடைசியாக அந்த கார் திருப்பூரில் நுழைந்தவுடன் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் காரை நிறுத்திவிட்டு 4 பேர் இறங்கி சென்றனர். பின்னர் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் உருவம் தெரிந்தது. அதில் இருந்தவர்களில் ஒருவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் ராமஜெயம், குருவி சக்தி, முகமது ரபீக், யாசர் அராபத் ஆகியோரை திருப்பூரில் மடக்கிப் பிடித்த நெல்லை போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர். 
இந்த கொள்ளையர்கள் திருடும் நகைகளை விற்று கிராமங்களில் சொத்து வாங்கி குவித்துள்ளனர். மேலும் திருடிய நகைகளை விற்பதற்காகவே ஒரு நகைக் கடை ஆரம்பித்துள்ளனர். அந்த கடை செழிப்பாக வேண்டும் என்பதற்காக 4 பேரும் குலதெய்வம் கோயிலில் வழிபட வந்த இடத்திலும் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்தபோது மாட்டிக் கொண்டனர்.