‘திருட்டு கதைய ஒழுங்காக திருடுங்க ‘: சாஹோ பட இயக்குநரைக் கலாய்த்த பிரெஞ்ச் இயக்குநர் 

 

‘திருட்டு கதைய ஒழுங்காக திருடுங்க ‘: சாஹோ பட இயக்குநரைக் கலாய்த்த பிரெஞ்ச் இயக்குநர் 

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இந்த படம் ‘லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்ச் படத்தின் காப்பி என்று சமூகவலைத்தளங்களில் ஒரு செய்து உலா வந்து கொண்டு இருந்தது. அதை உறுதிசெய்யும் வகையில் அந்த படத்தின் படத்தின் இயக்குநர் ஜெரோம் சல்லே ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘இந்தியாவில் எனக்கு நம்பிக்கையான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். இது எனது லார்கோ வின்ச் படத்தின் இரண்டாவது இலவச ரீமேக். முதல் ரீமேக்கை விட இது மோசமாக இருக்கிறது. 

sahoo

தெலுங்கு சினிமா இயக்குநர்களே, எனது வேலையை திருடினால் தயவு செய்து அதை ஒழுங்காகச் செய்யுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.