திருடுப்போன காரை கண்டுபிடித்துக்கொடுத்த பாஸ்ட்டேக்!

 

திருடுப்போன காரை கண்டுபிடித்துக்கொடுத்த பாஸ்ட்டேக்!

புனேயில் திருடுப்போன காரை பாஸ்ட்டேக் முறையை பயன்படுத்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புனேயில் திருடுப்போன காரை பாஸ்ட்டேக் முறையை பயன்படுத்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது.

fastag

அதுமட்டுமின்றி இனி சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழியும், மற்ற அனைத்து வழிகளும் பாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு டிச.15 உடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் குறிப்பிட்ட வாகனம் கடக்கும் போதும், பணம் கழிக்கப்பட்டு, அதற்கான எஸ்எம்எஸ்கள் உரிமையாளரின் மொபைல் போனிற்கு அனுப்பப்படும்.

இந்நிலையில் புனேயில் உள்ள கர்வெநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஜக்தேப், 56, என்பவரின் மொபைல் போனிற்கு அதிகாலை 4.38 மற்றும் 5.50 மணிக்கு பாஸ்ட்டேக் மூலம் தலா ரூ.35 சுங்கச்சாவடியில் வசூலிக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜக்தேப், வெளியில் சென்று பார்த்தார். அப்போது அவரது காரை காணவில்லை. உடனே போலீசுக்கு தகவல் கொடுத்த அவர், கார் கடந்து சென்ற சுங்கச்சாவடி குறித்தும், தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் குறித்து காவல்துறையினரிடம் விளக்கமளித்தார். 

fastag

இதையடுத்து கார் சென்ற வழியையும், ஜிபிஎஸ் வசதியையும் கொண்டு காவதுறையினர் தானே அருகே உள்ள சாலையில் ஜக்தேப்பின் கார் இருப்பதை கண்டறிந்தனர். காவல்துறையினர் சுற்றிவளைப்பதை அறிந்த திருடர்கள், காரை மீட்டு ஜக்தேப்பிடம் ஒப்படைத்தனர்.