திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் : முன்னேற்பாடுகள் தீவிரம்..!

 

திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் : முன்னேற்பாடுகள் தீவிரம்..!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் வீடான, திருச்செந்தூரில் உள்ள கந்தசஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் வீடான, திருச்செந்தூரில் உள்ள கந்தசஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த கந்தசஷ்டி விழாவில், ஆயிரக் கணக்கான மக்கள் 6 நாள் விரதமிருந்து முருகனை வழிபடுவர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் நாளை திருச்செந்தூர் கடற்கரையில் நாளை நடைபெறவிருக்கிறது. இதனைக் காண ஆயிரக் கணக்கான மக்கள் அங்குத் திரள்வர். 

Thiruchendur

சூரசம்ஹாரத்தைக் காண வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலிருந்து 3,500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சி கடற்கரை பகுதியில் நடப்பதால், ஜெ.சி.பி இயந்திரத்தைக் கொண்டு அக்கடற்கரையில் உள்ள மண்ணை சரிசமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல மக்கள் அங்குத் திரள்வர் என்பதால், அனைவருக்கும் மக்களின் பாதுகாப்புக்காகச் சூரசம்ஹாரம் நிகழ்வு சரியாகத் தெரியாது என்பதால், 7 இடங்களில் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு நேரலையாகக் காட்சிப் படுத்தப்பட உள்ளது. 

Soorasamharam

மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சூரசம்ஹாரத்தைக் கண்டு முடித்த பின் மக்கள் கடற்கரையில் நீராடுவர் என்பதால், மக்கள் கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 சூரசம்ஹாரம்