திருச்செந்தூரில் தேர்தல் புறக்கணிப்பு… வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடி!

திருச்செந்தூரில் தேர்தல் புறக்கணிப்பு… வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிச்சிவிளை ஊராட்சி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குச்சாவடி வெறிச்சோடி கிடக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிச்சிவிளை ஊராட்சி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குச்சாவடி வெறிச்சோடி கிடக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பிச்சிவிளை ஊராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.6 வார்டுகளை கொண்ட பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர்.

ttn n

ஆனால், சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவர்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ttn

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடுகின்றனர். வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.