திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: 3 ஆயிரம் போலீசார் குவிப்பு!

 

திருச்செந்தூரில் இன்று மாலை  சூரசம்ஹாரம்: 3 ஆயிரம் போலீசார் குவிப்பு!

பக்தர்கள் பலரும் கந்த சஷ்டி திருநாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு  வருகின்றனர்.

திருச்செந்தூர் : கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. 

 

தீபாவளிக்கு அடுத்த நாளான கடந்த 28ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனால் பக்தர்கள் 
பலரும் கந்த சஷ்டி திருநாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு  வருகின்றனர்.

ttn

அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்குநடைபெறவுள்ளது. 

 

 

ttn

கடலோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி படையெடுத்துள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் என்பதால் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.