திருச்சி மே 7-க்கு பிறகு ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் சிவராசு

 

திருச்சி மே 7-க்கு பிறகு ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி மாவட்டம் மே 7-ஆம் தேதிக்கு பிறகு ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மே 7-ஆம் தேதிக்கு பிறகு ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

trichy

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் பணிபுரிபவர்கள் யாரேனும் திருச்சிக்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். மேலும் திருச்சி மாவட்டம் மே 7-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக குறைந்து ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.