திருச்சி மத்தியச் சிறை கைதிகள் சாகுபடி செய்த 80 கிலோ சின்ன வெங்காயம்.. !

 

திருச்சி மத்தியச் சிறை கைதிகள் சாகுபடி செய்த 80 கிலோ சின்ன வெங்காயம்.. !

திருச்சி மத்தியச் சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதிகளுக்கான தேனி வளர்ப்பு மற்றும் நர்சரி கார்டன் திட்டங்களைக் கடந்த நவம்பர் மாதம் சிறைத்துறை டி.ஐ.ஜி திரு.பழனி தொடங்கி வைத்தார்.

tn

தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம் போன்றவை கைதிகளின் மன மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவும் கைதிகளின் மன அழுத்தம் குறைந்து அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு மாற இத்திட்டங்கள் பேருதவியாக இருக்கும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது. தற்போது, சிறை கைதிகள் அதனை முறையாகப் பராமரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

ttn

இதே போல, திருச்சி மத்தியச் சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். அங்குத் தயார் செய்யப்படும் பொருட்கள்  சிறை வளாகத்தில் உள்ள அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கைதிகள் 80% இயற்கை முறையில் விளைவித்த சுமார் 80 கிலோ சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த வெங்காயம் விரைவில் சிறை அங்காடியில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த முறை 100% இயற்கை முறையில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இச்சிறை கைதிகள் பயிரிட்ட கரும்பு விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.