திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை

 

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரை உடைத்து பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரை உடைத்து பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பின்புற சுவரை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொல்லையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் மதிப்பு ஐந்து கோடி அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி குடியரசு தினம் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என தெரிகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று வங்கியை திறந்த அதிகாரிகள் லாக்கர் உடைக்கப்பட்டிருபப்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சமயபுரம் காவல்துறை, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட இடத்தின் அருகே சிலிண்டர், கேஸ் வெல்டிங் மிஷின், சுத்தியல் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், அதில் உள்ள கைரேகைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.