திருச்சி கொள்ளையனிடம் விசாரணை.. அதிர்ச்சி தரும் தகவல்கள்..!

 

திருச்சி கொள்ளையனிடம் விசாரணை.. அதிர்ச்சி தரும் தகவல்கள்..!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் தங்கத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டதையடுத்து, மற்ற இருவரும் தானாக வந்து சரணடைந்தனர்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் தங்கத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டதையடுத்து, மற்ற இருவரும் தானாக வந்து சரணடைந்தனர். அதனையடுத்து, நகைக் கொள்ளைக்கு மாஸ்டர் பிளான் போட்ட திருவாரூர் முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அதில் முருகன் கொடுத்த பதிலில் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

Lalitha jewellery robbery

விசாரணையில் முருகன், மதுரையைச் சேர்ந்த கணேஷ் என்பவரும் இந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். நானும் கணேஷும் தான் சுவரைத் துளையிட்டு உள்ளேச் சென்று கொள்ளையடித்தோம். கொள்ளையடித்த நகையில் 12 கிலோ தங்கம் எனக்கும், கணேஷுக்கு 6 கிலோ,சுரேஷ் மற்றும் மணிகண்டனுக்கு தலா 5 கிலோ எனப் பிரித்துக் கொண்டோம். அந்த நகைக்கடையில் கொள்ளையடிக்கக் கடந்த ஒரு வாரமாக தன் குடும்பத்துடன் சென்று கடை முழுவதும் கண்காணித்து, நன்றாகத் திட்டமிட்டுத் தான் இதைச் செய்தோம் என்று பெரம்பலூர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். 

Suresh

மேலும், கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 150 கிராம் தங்கத்தைக் கொள்ளையடித்ததாகவும், மதுரை தல்லாகுளம் அருகே தனி நபருக்குச் சொந்தமான நகைக் கடையில் 1500 சவரன் நகை கொள்ளைப் போனதில் முக்கியப் பங்கு முருகனுக்கு உள்ளது என்றும் காவல்துறையினர் அதிர்ச்சி தரும் தகவல்களைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, கொள்ளையில் சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.